GuidePedia

0
இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து கண்காணிப்பிலேயே வைத்திருக்குமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன.

எனினும் அவற்றை கருத்தில் கொண்டு, முன்னர் தீர்க்கப்படாதிருந்த மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட கரிசனைக்குரியவிடயங்களை இலங்கை அரசாங்கம் கைவிட்டுவிடக்கூடாது.

இது குறித்து இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் இலங்கைக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top