GuidePedia

0

கிளி ஒன்று சொல்ல நினைப்பது !!!


என்னில் உன்னை வடித்தேன்
ஒரு உறவுப்பாலமாய் !!
கண்ணால் கண்ணீர் வடித்தேன்
நீ தூரச் சென்றதால் !!

உன்னை முத்தமிட துடித்தேன் 
ஆனால் நீ என்னை சுட்டுத் 
தின்ன தவித்தாய் !!
வாடுது மனம் தேடுது நல்ல 
அன்iபான உள்ளத்தை தினம் ! தினம் !!


இடை விடா இன்பம் கான 
உன்னைத் தேடி வந்தேன் !!
கிளி என்று நீயும் என்னை அள்ளி அனைத்தாய்
அப்போது நான் நினைத்தேன் என் அழகில்
நீ மயங்கிவிட்டாய் என்று !!
ஆனால் இல்லை என்னைப் பிடித்து
சிறைவைக்கப் போகின்றாய் என்று 
என்மனம் எண்ணவே இல்லை !!

நீ செய்தது உனக்கு அது 
நல்லதாய் இருக்கலாம் !!
ஆனால் என் சுதந்திரத்தை 
ஏன் மனிதா பறித்துச் சென்றாய் !!
உன்னோடு கொஞ்சிக் குலாவியதாலா ? ? ?

varigal : Kavichchilambu .........

Post a Comment

 
Top