GuidePedia

1


அம்மாவின் வலி ::

அன்புக்கு நிகரின்றி 
அளப்பரிய மனம் கொண்டு
தனக்கென தனித்துவமாய் திகழ்ந்து
தவமான செல்வமே நீ ! என் அம்மா.

உனக்குள் நானிருந்து
உன்னைக் காயப்படுத்துகையில்
வலியால் நீ துடிக்கும் அந்தவேளை
என்னால் உணர முயடிமால்
உன் வயிற்றில் இரத்தக் கட்டிகளின்
கூட்டுமொத்த உருவாய்
உருண்டு திரிவேனே அத் தருணம்
நீ படுகின்ற அந்த இன்ப வலியை
நான் என்னவென்று சொல்வேனோ !!

கருவறையில் என்னைத் தாங்கி
உலகிக்கு நீ வரவழைக்கும்
அக் கனப்பொழுதில் நீ
படுகின்ற அந்த வலியை
நான் என்னவென்று சொல்வேன் !!

அம்மா நீ உயிருக்கு ஓர் தரும்
அந்தவேளை உன் உயிரையும்
துச்சமாக மதித்து தன்னுடைய
பிள்ளை என்ற பூரிப்பில் - நீ
தாங்கும் வலியை நான் எப்படிச்
சொல்வேன் !!!

தவமிருந்து பெற்றாலும்
தனிக்கட்டையாகின்ற பொழுது
தவிக்க விட்டுச் சென்ற  - உன்
உறவுகளைப் பற்றி சிந்திக்கும்
பொழுது நீ படுகின்ற அந்த
மன வலியை நான் என்னவென்று
சொல்வேன் அம்மா !

அம்மா நீ எவ்வளவு வலிகள் கண்டாலும்
மனம் கலங்காமல் - உடல் கோணாமல்
மீண்டும் சேர்த்து வாழும் உன் மனதை
நான் எப்படிச் சொல்வேன் !!

அம்மாவின் வலி ஒரு நொடி என்றாலும்
அம்மாவின் பாசம் பல கோடி நொடிகள்
அழியாது நிலைத்திருக்கும் !!

::::::::: நௌசாத் முஹம்மட் ::::::

Post a Comment

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பாலே அழகாகும் வீடு!!

    ReplyDelete

 
Top